
ரியாத்:
சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிக்கு நேற்று மரண தண்டனை. நிறைவேற்றப்பட்டது. இது இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-வது மரண தண்டனையாகும்.
சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘ அப்துல்லா அல்-சுமைரி என்பவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த குற்றத்துக்காக, அலா அல்-ஜஹ்ரானி என்பவருக்கு ஜெட்டா நகரில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது..
கொலை, போதை மருந்து கடத்தல், பாலியல் குற்றம், ஆயுதம் ஏந்திக் கொள்ளையில் ஈடுபடுவது, மத நிந்தனை, பயங்கரவாதம் உள்ளிட்ட கொடும் குற்றங்களுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பெரும்பாலும் தலையைத் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்த ஆண்டு இதுவரை 70 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்காக ஜனவரி 2-ம் தேதி ஒரே நாளில் 47 பேருக்கு அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Patrikai.com official YouTube Channel