கோலாலம்பூர்:
தைப்பூச கொண்டாட்டத்தை 50 மணி நேரம் தொடர்ந்து ஒளிப்பரப்ப அஸ்ட்ரோ உலகம் இணையதளம் முடிவு செய்துள்ளது.
முதல் முறையாக மலேசியா பத்து குகை முருகன் கோவில் கொண்டாட்டம் மட்டுமின்றி, கோலாலம்பூர், பினாங் தண்ணீர் மலை, கலுமலை, இலங்கையில் உள்ள நல்லூர், லினுவில், கதிர்காமம், இந்தியாவில் பழனி ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோவில் நடைபெறும் தைப்பூச திருவிழா முழுவதும் இடைவேளியின்றி 22ம் தேதி முதல் 50 மணி நேரத்திற்கு ஒளிபரபப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த தைப்பூச திருவிழாவை மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ள வாசகர்கள் இந்த நிகழ்சியின் ஒளிபரப்பை கண்டு கழித்தனர். பேஸ் புக்கில் மட்டும் 41.4 மில்லியன் பேர் பார்வையிட்டனர். இது மலேசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு நடக்கும் ஒளிபரப்பு மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. டாக்டர் திலகவதி, கர்தீஜெஸ் பொன்னையா ஆகியோர் ‘திருமுருகாற்றுப் படை’ முக்கியத்துவம் குறித்து இந்த இணையளத்தில் நேரலையாக பேசுகின்றனர்.
சமூக வளைதளங்கலான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவறறில் ‘‘வெற்றிவேல்2016’’ என்ற தலைப்போடு அஸ்ட்ரோ உலகம் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலேசியா பத்து குகை கோவில், பினாங்கில் எல்இடி திரை மூலம் வெளியிடங்களில் ஒளிபரபப்படுகிறது.
நேரடி ஒளிபரப்பு அஸ்ட்ரோ வின்மீன் ஹெச்டி மற்றும் வானவில் சேனல்களின் பேராசிரியர் ஞானசம்பந்தத்தில் வர்னணையுடன் கிடைக்கிறது. அரை மணி நேரம் திருமுருகாற்றுப்படை நிகழ்ச்சியை 6 தொகுப்புகளாக ஒளிப்பரப்படுகிறது. தைப்பூச விழாவின் முக்கியத்துவம் குறித்து சுகி சிவம், தேசா மங்கையர்கரசி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.