ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் போலீசாருடன் நடந்த  மோதலில் 36 நக்சலைட்கள்  ர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் மறைந்துள்ள  நக்சலைட்கள் ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

நாராயண்பூர்-தந்தேவாடா மாவட்ட எல்லையில்  மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாராயண்பூர்-தந்தேவாடா மாவட்டத்தின் கூட்டுக் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தெற்கு அபுஜ்மத் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே  நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 36 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டை, நெந்தூர் மற்றும் துள்துளி கிராமங்களுக்கு இடையே மதியம் 1 மணியளவில் தொடங்கிய துப்பாக்கிச் சண்டை மாலை வரை நீடித்தது மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதலின்போது நக்சல்களிடம் இருந்து ஏகே 47, எஸ்எல்ஆர் மற்றும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தண்டேவாடா எஸ்பி கவுரவ் ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுவரை 14 நக்சல்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால் நக்சல்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நடவடிக்கை மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர். ஆதாரங்களின்படி, பிஎல்ஜிஏ 6வது நிறுவனம் என்கவுண்டரில் பெரும் இழப்பை சந்தித்தது. ப்பகுதிக்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். சமீப நாட்களில், நக்சல்களுக்கு எதிரான வேட்டையில் போலீசாருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.