கெய்ரோ:
தனது தீவிரவாத வீரர்கள் 20 பேர்தலையை துண்டித்து ஐஎஸ்எஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர்.
ஈராகில் ராணுவத்துக்கும் ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக கடுமையான சண்டை நடந்து வருகிறது. மொசூலில் போரில் ஈடுபட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாத வீரர்கள் 20 பேர் அங்கிருந்து தப்பி வந்தனர்.
தப்பி வந்தர்களை மொசூலில் உள்ள விக்டினிட்ட சோதனை சாவடி அருகே வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்தனர். விசாரணையில் மேற்கு மொசூல் பகுதியில் போர் நடந்து வரும் பகுதியில் இருந்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், போரில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் இருந்து தப்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 20 பேரும் ஷரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை எதிரிகளாக கருதிய நீதிமன்றம் அவர்களுக்கு மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது.
மத்திய மொசூலில் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் 20 பேரையும் தலையை துண்டித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கொலை செய்தனர். சொந்த படையின் வீரர்களையே கொல்வது இந்த அமைப்புக்கு புதிதல்ல.