
கொச்சி:
கொச்சி துறைமுகம் பகுதியில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஓஎன்ஜிசிக்கு சொந்தமான சாகர் பூஷன்’ என்ற கப்பல் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நடந்ததுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குண்டு வெடிப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel