டெல்லி:
தீங்கு விளைவிக்கும் 13 அப்ளிகேஷன்கள் கூகுல் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆந்த்ராய்டு மொபைல் போன்களுக்கு அப்ளிகேஷன்களை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளும் வகையில் கூகுல் ப்ளே ஸ்டோரை கூகுல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்டோரில் இருந்து சில அப்ளிகேஷன்கள் தானாக டவுன்லோடு ஆகிவிடுவதாக புகார்கள் எழுந்தது. இந்த இவை டவுன்லோடு மூலம் மொபைலில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும், சில கோப்புகள் அழிந்துவிடுவாதகவும் புகார் வந்தது. டவுன்லோடு எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு கூகுல் ஸ்டோரில் இடம் பிடித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஹனிகோம்ப், ஜஸ்ட் ஃபயர், கேக் ப்ளாஸ்ட், கிரேசி ப்ளாக், டிராக் பாக்ஸ், டைனி பசுல், ஜம்ப் ப்ளானட், நின்ஜா ஹூக், பிக்கி ஜம்ப், ஈட் பபுள், ஹிட் பிளானட், கேக் டவர், கிரேசி ஜெல்லி உள்ளிட்டவை நீக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.