திருவனந்தபுரம்: குவைத் செல்ல மத்தியஅரசு அனுமதி தர மறுத்துள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
“குவைத் மன்காஃப் தீ விபத்தில் 24 மலையாளிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கேரள அரசு சார்பில் குவைத்திற்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டு, அதற்காக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் குழுவினர் தயாராக இருந்தனர். தொடர்ந்து, இதற்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், மத்தியஅரசு சார்பில் அங்கு செல்ல அனுமதி மறுத்துவிட்டது. கொச்சி விமான நிலையத்தில், விமானத்திற்கு காத்திருந்த நிலையில் குவைத்திற்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள செயல் கேரள மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, கொச்சியில் செய்தியாளர்களிடம் பேpra கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் , இதுபோன்ற இக்கட்டான சூழலில் மத்திய அரசின் இது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என கடுமையாக சாடியதுடன், அங்கு தீவிபத்தில் “இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு சிறிது நிவாரணம் வழங்குவதற்காக குவைத் செல்ல மட்டுமே நாங்கள் அனுமதி கோரினோம். ஆனால் அதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்காத செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.