முதன் முதலாக….
சிறுவயதில்
சைக்கிள் கற்றுக்கொள்ள ஆசை
வந்தபோது…..
பக்கத்து வீட்டு அண்ணனின்..
பெரிய சைக்கிள் வாங்கி…
குரங்கு பெடல் அடித்து….
கீழே விழுந்து…
முட்டியிலே அடிபட்டு ரத்தம் வந்தது…!!
“எல்லாம் சரியா போயிடும்……
அடிபடாம சைக்கிள் ஓட்ட கத்துக்க முடியாது..”…அண்ணன் சொன்ன வார்த்தை…!!
உண்மைதான்….
இன்று ஒரு தொழில் கற்றுக்கொண்டு
அதில் அடிபட்டு எழும்போதும்….
குரங்கு பெடல் போட்டு….சைக்கிள்
கற்ற ஞாபகம்…ஏனோ எனக்கு
மீண்டும் வருகிறது…!!
புதிதாய் ஒன்றை கற்றுக் கொள்ளும்போது…
விடாமுயற்சி தேவை என்பதையும்…
அதில் வரும் துன்பத்தை கண்டு
பயந்து ஓடி விட கூடாது….
என்பதையும் உணர்த்தும் கருத்து….!!
நீங்களும் சற்று ….
பின்னோக்கி பாருங்கள்…
“குரங்கு பெடல் “…சுகமான அனுபவம்தான்…!!