சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கீழடியில் முதல் 3 அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. 4-வது கட்ட பணிகளை தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது.
அகழ்வாராய்ச்சியில் சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி வளையல்கள், சுட்ட மண்ணால் ஆன ஓடுகள், யானை தந்தத்தில் ஆன முத்து மணிகள், உறை கிணறு உள்ளிட்ட 13,638 அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், அவற்றைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
5-வது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
இந்த அருங்காட்சியகம் அமைக்க ஓர் ஏக்கர் நிலமும், ஒரு கோடி ரூபாய் நிதியும் தமிழக அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.