kuba
 
 
ஹவான்னா:
திரெதிர் முனைகளில் கடும் எதிரிகளாய் களத்தில் நின்ற தேசங்கள் அமெரிக்காவும், கியூபாவும். அங்கு உலக அரங்கமே உற்றுநோக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று ( மார்ச் -20) அரங்கேறி இருக்கிறது.  அமெரிக்கப் பிரதமர் பராக் ஒபாமா, கியூபா தலைநகரில் காலடி வைத்திருக்கிறார். 88 ஆண்டுகளுக்குப்பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் பயணம் செய்திருப்பது இதுவே முதல்முறை.
கியூபா தலைநகர் ஹவான்னா தெருக்களில் வான்மழைதூவி வரவேற்க-  ஒபாமாவின் ‘தி பீஸ்ட்’- எனும் குண்டுதுளைக்காத கவச வாகன வண்டி அமைதியைச் சுமந்து ஓடத்தொடங்கி இருக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க அதிபரின் வருகை  உலக அமைதிக்கான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
3 நாள் பயணமாக ஒபாமாவும் அவரது குடும்பத்தினரும்  மத்திய ஹவானாவில் வந்திறங்கியபோது தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால் அங்குள்ள தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. ஒபாமாவுக்கு, கியூபா கம்யூனிச அரசின் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மத்திய ஹவான்னாவிலிருந்துதான் ஒபாமாவின் 3 நாள் கியூபா பயணம் துவங்கி இருக்கிறது.  ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நகரம், இளம் காதலர்கள், இசைக் கலைஞர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் என  கூட்ட நெரிசலில் தத்தளிக்கும். ஆனால், ஒபாமாவின் வருகையால் அங்கு போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாய் உள்ளது. எனவே அங்குள்ள பல தெருக்களில் மக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள், மாளிகைகள், ஹோட்டல்கள் என அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஓல்ட் டவுன் என்ற அந்தப்பகுதிக்குள் ஒபாமாவின் குண்டு துளைக்காத வாகனம் சென்றபோது அந்தப்பகுதியே வெறிச்சோடிக் கிடந்துள்ளது. இந்தப்பகுதிக்கு ஒபாமா வருகைதருவார் எனத் தெரிந்திருந்தும் சாலை ஓரங்களில் நின்றுகொண்டு அமெரிக்க அதிபரை வரவேற்க கியூபர்கள் எவரும் இல்லை. ஓல்ட் டவுன் பகுதிக்குள் ஒபாமாவின் கார் நுழைந்தபோது  கடுமாயான் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அந்தத் தெருவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களின் எண்ணிக்கை வெறும் 20 பேர் மட்டும்தானாம்.  முதலில் போலீசார். அடுத்து வெளிநாட்டுப் பயணிகள். அதற்கு அடுத்து 3 ஆவது இட்த்தில்தான் கியூபர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அதிலும் பாதிக்குமேற்பட்டோர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள். இரன்டே இரண்டுபேர் மட்டும்தானாம் கியூபர்கள்.
**********************