நாடகம் நடக்கிறது….
நடிகர்கள் கூட்டம்….
புதிய ஒப்பனைகளில் …!!
பரபரப்பாய்
தயாராகிறது மக்கள் கூட்டம்…!!
புதிய காட்சிகள்…பழைய பரப்புரைகள்…!!
அடடே….தேர்தல் திருவிழா…!
ஐந்து வருடங்களுக்கு…ஒருமுறை வரும்
திருவிழா…!!
யார்…யாருடன்…கூட்டணி வைப்பார்கள்…?!
கிராமத்து டீக்கடைகளின்
முன்னால் ….நடக்கும் விவாதங்கள்…
ஒருபுறம்!!
நகரங்களில் தொலைக்காட்சிகள் முன்
அமர்ந்து…கட்சி சேனல்….நடுநிலை சேனலில்
நடக்கும் விவாதங்களை பார்த்து…
அடுத்தநாள் ஆபிசில் பேச….
விசயங்களை சேகரிக்கும்
மக்கள்…மறுபுறம்.!!
லெட்டர் பேட் கட்சிகள்….சாதி சங்கங்கள்
மாநாடு நடத்தும் …பெரிய கட்சிகளுடன்
சீட் பேரம் பேச….!
நாளிதழ்கள் …நாள்தோறும் சொல்லும்.,..
புதிய.,புதிய கதைகளை….கற்பனைகளை.,!!
இவர் அவரை சந்தித்தார்..!! அவர் இவரை
சந்தித்தார் என்று.,..?!
மக்கள் பிரச்சனைகளை…..
அடிப்படை தேவை
முதல்….நதிநீர் பிரச்சனைவரை….தீர்க்காது எந்த கட்சியும் !
ஆட்சி செய்யும் கட்சியை
எதிர்க்க ….எதிர்கட்சிக்கு காரணம் வேண்டாமா…?!
ஊழல் எனும் வார்த்தை தமிழில்
அர்த்தம் இழந்து போகும்…விரைவில்.,..!!
மாற்றி…மாற்றி ஓட்டளித்து….
கொஞ்சம் மானத்தை காத்துக்கொள்கிறார்கள்….
தமிழ் மக்கள்….!!
நாட்டையும்தான்…?!
ஆனால் ஆச்சரியம் தரும் ஒரு விசயம்…
சென்னை முதல் குமரிவரை….அமைதியாய்
ஒரே மாதிரி முடிவு எடுக்கும்
தமிழ் மக்கள் கூட்டம்…!!
நாடகத்தின் கிளைமாக்ஸ்….!!
தேர்தல் முடிவு வரும்வரை…
யாருக்கும் தெரியாது…!!