
நடனங்களின் முடிவில்
பாராட்டப்படுகிறாள்
அல்லது ஆசீர்வதிக்கப்படுகிறாள்
நடன தாரகை
தூரிகையோட்டத்தின் போதே
வியப்புக்குள்ளாக்கி இறுதியில்
தலைவணங்கச் செய்கிறான்
ஓவியன்
காலம் தெரியாத காலத்தில்
கலை செய்த சிற்பிகள்
கலாச்சார பெருமையின்
அடிநாதமாகிவிட்டனர்
பெயர் தெரியாவிடினும்
விதை விதைத்து
உயிர் வளர்ப்பார் யாரும்
கலைஞனில்லையென்றாலும்
காலம் தாழ்த்தாமல்
மனிதனென்றாவது கொள்ளுங்கள்..
– பல்லடம் ராசு
Patrikai.com official YouTube Channel