தோழியிடம் நண்பனை பற்றி சொல்லியதோடு நில்லாமல் நாயகனிடமும்
அறிமுகம் செய்கிறாள் போனில்.ஒரு பலகீனமான தருணத்தில் இதுவரை
யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவளின் ஆழ்மன வேதனைகளை எழுதுகிறாள்.
அவன் inboxல் (லோப் டாப் ல் அவளுக்கு எழுததெரிந்த இடம் அப்போது inbox தான்
இவனை மட்டுமே அவள் inboxக்கு தெரியும் அப்போது ) விடிய விடிய எழுதுகிறாள்.
எதுவும் send பண்ணவில்லை. மறுநாள் பார்க்கும் போது அவள் send
பண்ணாதளால் ஒன்றும் இன்போசில் இல்லை நாயகனிடம் கேட்கிறாள்
எல்லாம் பண்ணிடீயா ?
நீ எதுவும் அனுப்பல loosu…
நைட் டைப் பண்ணினேன்
ரொம்ப நேரம் டைபிங் ன்னு காட்டுச்சு… ஏதோ பெருசா msg வருன்னு
எதிர்பார்த்தேன் ஒன்னும் வரல என்னாச்சி…
தெரியல சரி விடு…
Oye !ஏதாவது பிரச்சனையா ?
இல்ல
சொல்லு லூசு !
இணைப்பை துண்டிகிறாள்.
சில நிமிடத்தில் call வருகிறாது.
ஹலோ…
என்னாச்சி ? ஏன் நைட் தூங்கல ? என்ன எழுதுன ? ஏன் உன் வாய்ஸ் சரியில்ல
?அவள் அழுது இருந்ததால் வாய்ஸ் சரியில்லை என்பது அவனால் கண்டுபிடிக்க
படுகிறது. ஒரு வேதனையில் இருக்கும் போது ஒரு இப்படி அன்பாக விசாரிக்கும்
போது உடைந்து விடுகிறாள். முதல் நாள் நடந்த ஒரு குடும்ப பிரச்னையை
சொல்லி அழுகிறாள்.
சரி அழாத loosu… நைட் நீ தூங்கலா எல்லாத்தையும் மறந்துட்டு தூங்கு…
தூக்கம் வரல எனக்கு
வரும் நா பக்கத்தில் இருப்பதா நினைச்சுகோ என்னை கட்டிபுடிச்சு தூங்கு தூக்கம்
வரும்.
இந்த முறை அவளுக்கு (கட்டிபுடுசுகோ ) இந்த வார்த்தை தப்பாக
தோன்றவில்லை. மாறாக ஒரு ஆறுதலை உணர்கிறாள்.
ம்…
சாப்டியா ?
இல்ல முதலில் சாப்டு அப்ப தான் தூக்கம் வரும்.
ம்… சரி
ஏதோ ஆறுதலாய் உணர உறங்கி விடுகிறாள்.
மறுநாள் அவள் inboxக்கு ஏதோ வேறு idயில் இருந்து அசிங்கமாய் msg & pic வருது.
இவள் delete பண்ண பண்ண மீண்டும் மீண்டும் வருது. ( அப்போது அவளுக்கு block
ன்னு ஒரு ஆப்ஷன் இருப்பதே தெரியாது )
நாயகனை msg யில் அழைக்கிறாள்.
இரண்டு முறை பேரை மட்டுமே டைப் பண்ணி அனுப்ப பதிலாய்
என்ன டீ கட்டிப்பிடிக்கனுமா உன்ன… என்று msg வர அதிர்ச்சி அடைகிறாள்.
கோவமாக
ஒன்னும் வேண்டா…
வேண்டாமா !?
வேண்டா…
ஏன் வேண்டா !
என்னால யாருக்கும் துரோகம் பண்ணமுடியாது.
நம்ம எப்போ துரோகம் பண்ணினோம் !
hmm… சரி என்ன பண்ற ?
ஒண்ணு இல்ல Bye
Oye என்ன கோவமா ?
பதில் சொல்லாமல் இணைப்பை துண்டிக்கிறாள்.
Call பண்றான்.
Oye என்ன பிரச்சன உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம் வருது உனக்கு ?
பின்ன என்ன எப்ப பாரு கட்டிக்கவா கட்டிக்கவான்னு கேட்டா… எல்லார் கிட்டயும்
இப்படி தான் பேசுவீயா நீ ?
லூசு லூசு எல்லார் கிட்டயும் இப்படி பேசுவாங்களா ? புடிச்சவங்க கிட்ட தான்
பேசுவாங்க லூசு…சரி நா இன்னிக்கி ஊருக்கு போறேன். போய்டு வந்து பேசுறேன்.
Hho… எப்போ வருவ
மூணு நாள் ஆகும்.
Msg ல கூட பேசமாட்டியா?
msg பண்றேன், போன் பண்ணமுடியாது.
ஏன்…
என்ன ஏ… வீட்ல தெரிஞ்சா கொன்னுடுவாங்க, msg பண்ணு சரியா.
சரி
யாரோடும் தன் வலிகளையும், வேதனையை பகிர்ந்து கொள்ளாத அவள் அதை
எழுதும் போது ஒரு ஆறுதல் கிடைப்பதை உணர்கிறாள். டைப் செய்தாலும் send
ஆகாமல் பார்துகொள்கிறாள். பெரும்பாலான நேரங்கள் அவன் ஆன் லைனில்
இல்லாத போதே இவள் பேசுவாள் send பண்ணவும் மாட்டாள். ஒரு பலகீனமான
நேரத்தில் அப்படி பேசும் போது கவனகுறைவாக அவை send ஆகிறது அவள்
கண்ணீர் வரிகள் திடீர் என இடையில் ஆங்காங்கே ‘ம்’ எழுத்து வந்துகொண்டு
இருப்பதை கவனிக்கிறாள். யாரோ கடவுளை போல் தன் கண்ணீருக்கு ஆறுதலாய்
அருகில் அமர்ந்து ஆறுதல் தருவதாய் நினைக்க, அது நம் நாயகன்.அவன் பேரை
சொல்லி அழைக்க
சொல்லுமா…
Msg உனக்கு வந்திடுச்சா…
ம்… ஆமா
எல்லாம் delete பண்ணு pls…
சரி ஏன் இப்போ பழசெல்லாம் யோசிக்கிற…
எல்லாம் படிச்சிட்டியா ?
ஆமா
delete
பண்ணிடு pls… உனக்கு அனுப்பனுன்னு நினைகல தெரியாம send ஆகிடுச்சு.
சரி feel பண்ணாத delete பண்ணிறேன்.
Thanks.
இது சரியா ? தவறா ? யாரோ முகம் கூட தெரியாத ஒருவருக்கு நம் சொந்த
வாழ்வின் நிகழ்வுகளை பகிர்வது நல்லதா ? அவரும் கடவுளை போல் ஆறுதல்
சொல்வது போல் தோன்றுகிறதே !!ஏன் ? இப்படியாக பல்வேறு குழப்பங்களுக்கு
நடுவில் அந்த ஆறுதல் அவளுக்கு தேவைப்படுவதை உணர்கிறாள்