நாயகன் அந்த பெண்ணிடம் நம்பர் கொடுக்க நாயகிக்கு call வருது
Hello
ஹலோ நான் அபிநயா பேசுறேன்
சொல்லுங்க
ரைட்டர் உங்க நம்பர் கொடுத்தார். Ecr ப்ராபர்டி விஷயமா பேச சொன்னார்.
என் கிட்டயும் சொன்னார் டீட்டெயில் சொல்லுங்க…
பிசினஸ் சம்மந்தமாய் மட்டுமே பேசி முடிக்க நாயகி தான் கவிதை
எழுதுவதையோ, அந்த பெண் தன் fb frd (நாயகியின் frd லிஸ்டில் ஏற்கனவே அந்த
பெண் இருப்பது நாயகிக்கு தெரியும்) என்பதையோ காட்டிக்கொள்ளவில்லை.அந்த
பெண்ணும் வேறு எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் ஸ்ரீ உடல் நலம்
பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட நண்பன் என்ற முறையில்
நாயகனிடம் சொல்கிறாள் நாயகி. நாயகன் நேரில் வருவதாக சொல்ல சின்ன
தயக்கம் இருந்தாலும் சரி என்கிறாள் நாயகி. Call பண்றான்.
எங்க அட்மிட் பண்ணிருக்காங்க
மருத்துவ மனை பெயரை சொல்ல
நீ எங்க இருக்க
இப்போ அதோடதான் இருக்கேன்
போன அதுகிட்ட கொடுக்க முடியுமா ?
ம்… இதோ தர்றேன்.
ஸ்ரீ கையில் போன் கொடுக்க
இருவரும் பேசிட்டு
அது வர்றேன்னு சொல்லுது நீ கொஞ்சம் கூட இரு அவர் இருந்த அதால
வரமுடியாது.
சரி நானும் பார்க்கணும் அபிநயா பேசினதை பற்றி டீட்டயல் சொல்லணும்.
இருவரும் வெயிட் பண்ண மதியம் வரும் நாயகன் ரிசப்ஷன் ல ஸ்ரீ யோட
ஹஸ்பெண்டு இருப்பதை பார்த்ததும் அங்கேயே அமர்ந்து call பண்றான்.
Oye எங்க இருக்க ?
ஹாஸ்பிட்டல்ல அவரும் இருக்கார்.
யாரு ?
ஸ்ரீ ஹஸ்
இல்ல அப்பவே கிளம்பிட்டார்.
Loosu கொன்னுடுவேன் இப்பதான் பார்த்தேன் இங்க தான் இருக்கார். ( பில் ப்ராசஸ்
காரணமாக இருந்திருக்கிறார். இவர்களுக்கு தெரியாது )
நீயாரையோ பார்த்துட்டு சொல்லாத நீதான் அவரை பார்த்ததே இல்லையே
போட்டோ பார்த்திருக்கேன் லூசு. நீ நம்ப மட்ட இரு அவரையே போட்டோ எடுத்து
அனுப்புறேன் whats app ல பார்த்து சொல்லு.
போட்டோ வ பார்த்தியா ?
mm ஆமா… பில்லிங் ல இருந்திருப்பார் போல
போய்டார் வர்றேன் இரு…
நீண்ட நேரம் பேசிவிட்டு செல்ல, அடுத்தடுத்து நான்கு முறை வந்து செல்கிறான்.
ஒரு முறை ஸ்ரீ யின் கணவரிடமும், ஒரு முறை குடும்ப உறுபினர்கள் இருக்கும்
போதும், அவர்கள் முன் நண்பனாக காட்டிக்கொள்ள, ஆனால் நடக்கும் கதை
வேறு. அவர்கள் இல்லாத நேரத்தில் நாயகிக்கும் தெரியாமல் ஸ்ரீ யை போட்டோ
எடுக்கிறான். ஆப்ரேசன் முடிந்த நிலையில் வெறும் அங்கி (ஆப்ரேசன் அப்ப use
பண்ற ஓர் உடை அது ) நார்மல் வார்டு தான் ஆனால் அந்த spl மருத்துவமனையில்
பேசன்ட் அந்த உடையில் தான் இருக்கணும். படுத்த நிலையில் இருக்கும் ஸ்ரீயை
போட்டோ எடுத்திருப்பதை பார்த்ததும்,அதை ஸ்ரீயும் வாங்கி பார்ப்பதும்
அருவருப்பாக உள்ளது நாயகிக்கு ஆனாலும் வெளியே காட்டிகொள்ளாமல்
இருக்கிறாள்.ஸ்ரீயின் சம்மதத்தோடு நடக்கும் போது இவள் தலையிட
விரும்பவில்லை. அவன் மேல் இருக்கும் மதிப்பு குறைய தொடங்குகிறது.
மறுபடியும் விலகுகிறாள் நாயகி. உணரும் நாயகன் call பண்றான்.
ஹலோ…
தூக்கமா லூசு.
ஆமா ஹாஸ்பிட்டல் ல இருந்து morning தான் வந்தேன் நீ ஸ்ரீ பேசணுன்னா அது
நம்பருக்கு call பண்ணு. (தனிடம் பேசவே call பண்ணினான்னு தெரிந்தே
சொல்கிறாள்)
நான் உனக்கு தான் call பண்ணேன். அதுகிட்ட பேச அது நம்பருக்கு கூப்பிட
தெரியாதா எனக்கு.
ம்ம்…
சாப்டியா ?
ம்…
நீ தூக்கத்தில் இருக்க நல்லா தூங்கு…
ஓகே bye…
ஆனால் அவள் தூங்கவில்லை.அவனோடு பேசவிரும்பவில்லை. அவன்
விடுவதாகவும் இல்லை.