பெங்களூரு

ர்நாடக மாநில அமைச்சர்கள் பட்டியலை அம்மாநில ஆளுநரிடம் துணை முதல்வர் பரமேஸ்வர் அளித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதனிடையே, தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்க ள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

இருவரையும் கட்சி மேலிடம் அழைத்துப் பேசியது. 5 நாட்களாகப் பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும் துணை  முதல் மந்திரியாக ஜி  பரமேஸ்வரும் பொறுப்பேற்க இருப்பதாகக் காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.  இன்று துணை முதல்வர் பரமேஸ்வர் அம்மாநில ஆளுநரிடம் அமைச்சர்கள் பட்டியலை அளித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.