கே. பாலசந்திரன் நூற்றுக்கு நூறு ஆரம்பித்து இன்றைய தூங்கா வனம் வரை கிறிஸ்துவப் பெண்கள், தராளமாக நடந்து கொள்வார்கள் என்றே காட்டப்பட்டு வருகிறது.
தூங்கா வனத்தில், ஒரு பெண்ணை அவளுடன் வந்தவன், பாத்ரூம் ல வைச்சி முயற்சி பண்றான். அவளின் எதிர்ப்புக் காரணமாகக் கமல், அவனை அடித்து வீழ்த்துகிறார்.
பிறகு கூட்டமான ‘பப்’ல, தனக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியை சமாளிக்க ‘சட்’ டென்று பலமுறை அந்தப் பெண்ணின் உதட்டோடு உதட்டை இணைத்து தலைக்குப் பின் மறைந்து கொள்கிறார்; அந்தப் பெண்ணின் அனுமதி இல்லாமல்.
அந்தப் பையனும் பாத்ரூம் ல அதாங்க பண்ணான். அவனை அடிச்சிட்டு அதையே இவுரு பண்றாரு. அவனாவது சின்னப் பையன்… பாவம் அந்தப் பொண்ணு. பாருங்க அந்தப் பொண்ணு பேரும் ‘எஸ்தர்’.
மனைவியோடு பிரச்சினை அல்லது பிரிந்து வாழ்வது போல் காட்டுகிற கமலின் எல்லாப் படங்களிலும், அவர் நல்லவர்தான்.. மனைவிகள்தான் சரியில்லை அல்லது இவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே காட்டுகிறாரே? இதிலும்.
நீதி: கணவனோடு சண்டை போடுகிற, பிரிந்து இருக்கிற மனைவிகள்தான் தவறு செய்வார்கள் அல்லது தவறான புரிதலோடு பிடிவாதமாக இருப்பார்கள். அப்டியா?
(நூற்றுக்குநூறு முதல் தூங்காவனம் வரை என்ற தலைப்பில் வே.மதிமாறன் எழுதிய முகநூல் பதிவு.)