சிதம்பரம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒத்தி வைக்கபடுள்ளன.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குத் தொடர் கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலகலைக் கழகம் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பலகலைக்கழகம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]