
கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு, பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் திரைப்படங்கள் வெளியிடப்படும்போது, ரசிகர்கள் அவரது உருவம் பொறிந்த கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களுக்கு பாலாபிஷேகம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் ரசிகர்கள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களுக்கு பாலாபிஷேகம் நடத்தி வருகின்றனர். இதனால் பால் வீணாவதாகவும், கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களுக்கு பாலாபிஷேகம் நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் பெங்களுரு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel