சென்னை:
மாஃபா பாண்டியராஜனை தொடர்ந்து மேலும் 10 அமைசசர்களும், சில எம்.எல்.ஏக்களும் சசிகலா பக்கம் தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தால் சசிகலாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. ஆக, தற்போது 233 சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களில் சபாநாயகர் வாக்களிக்க முடியாது. 232 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள்.
(அ.தி.மு.க.: 135 , தி.மு.க.: 89, காங்கிரஸ்: 8, முஸ்லீம் லீக்:1 )
பெரும்பான்மை பெற ஆட்சியமைக்க 117 பேரின் ஆதரவு தேவை. 135 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் தனக்கு உள்ளதாக ட்சியமைக்க கோரினார் சசிகலா. இது பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 111 ஆக மாறி இருக்கிறது. இதனால் சசிகலா தரப்புக்கு அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதே நேரம், பன்னீர்செல்வத்தாலும் 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியுமா என்ற கேள்வி எழுநதுள்ளது. அப்படி கிடைக்காத பட்சத்தில் அவர் தி.மு.க., காங்கிரஸ் உதவியை நாட வேண்டி இருக்கும்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ .நடராஜ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் அ.தி.மு.க. கட்சி உறுப்பினராக சட்டப்படி கணக்கில் கொள்ளப்படும் தமீமும் அன்சாரி உட்பட 16 பேர், இன்னமும் தாங்கள் யார் பக்கம் என்பதை தெரிவிக்கவில்லை. இவர்களை தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்று ஓ.பி.எஸ். பக்கம் தீவிரமாக நம்புகிறது. இவர்களை வளைக்க சசி தரப்பும் தலையால் தண்ணீர் குடித்து வருகிறது.
ஆகவே குதிரை பேரம் தீவிரமாக நடைபெற ஆரம்பித்துவி்ட்டது. ஆளுநரின் மவுனம், மத்திய பாஜகவின் அரசியல் விலையாட்டு ஆகியவற்றால் இந்த நிலை.
வாழ்க ஜனநாயகம்.