மேலே உள்ள படம் கடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதி வேகத்தில் பரவி வருகிறது. அதோடு, “பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள் பிறந்துள்ளன. 10 பெண் 1 ஆண்.” என்று மிரள வைக்கிறது அந்த செய்தி. இதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
ஆனால் இது உண்மை அல்ல.
மேலே உள்ள படம் கிராபிக்ஸ். நிஜத்தில் அத்தே பெரிய வயிறு சாத்தியமே இல்லை. கீழே உள்ள படம் உண்மைதான். ஆனால் செய்தி பொய்.
இந்த பதினோரு குழந்தைகளும் பதினோரு அம்மாக்களுக்கு பிறந்தவை. படம் எடுக்கப்பட்டது கடந்த 2011ம் ஆண்டு, நவம்பர் 11ம் நாள். இடம் சூரத். அங்குள்ள ஒரு மருத்துவனையில், செயற்கை முறை கருவூட்டல் மூலம் கர்ப்பமான 11 தாய்மார்கள், அக்டோபர் 11ம் தேத பிரசவிக்க விரும்பினார்கள். அதாவது, 11.11.11.
அப்படி பிரசவித்தவர்களின் குழந்தைகள்தான் இவை!
ஹூம்… எப்படி எல்லாம் யோசிச்சு வதந்திய பரப்பராங்க… கிராபிக்ஸ் பண்றாங்க! இந்த நேரத்த உருப்படியான வழிகள் செலவு செஞ்சா, இந்தியா இன்னேரம் டபுள் டைம் வல்லரசாகியிரும்பா!