
ஒரு தாயை போல் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: ஜெயலலிதா
மதுவிலக்கு குறித்து கருணாநிதி கூறுவது கொலை செய்யப்பட்டவருக்கு ஆதரவாக கொலை செய்தவரே கூக்குரலிடுவதுபோல் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்குவந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என மீண்டும் தெரிவித்தார். மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை குட்டிக்கதை ஒன்றை கூறி ஜெயலலிதா விமர்சித்தார்.
ஒரு தாய் தன் பிள்ளைகளின் தேவைகளை உணர்ந்து செயல்படுவதுபோல் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
Patrikai.com official YouTube Channel