புதுடெல்லி
எய்ட்ஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமான எச்.ஐ.வி.கிருமிகள் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றையை ( மார்ச் -11) மக்களைக் கூட்டதில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
2015 ஆம் ஆண்டுக்காக மதிப்பீட்டு அறிக்கைப்படி இந்தியாவில் 21.17லட்சம் பேர் எச்.ஐ.வி.கிருமியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 ஆவது இடம் பெற்றுள்ளது. முதலிடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.இங்கு 68 லட்சம் பேர் எச்.ஐ.வி.பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அடுத்து 34 லட்சம் எ.ச்.வி.நோயாளிகளைக் கொண்டுள்ள நைஜீரியா 2 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.