rengasamy1
புதுவை சட்டபேரவை தேர்தலுக்கான என்.ஆர். கங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.
மதுரை:
புதுச்சேரி மாநில முதல் வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:– சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். ஆன்மிக சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியிடுவேன். கூட்டணி குறித்து முடிவெடுத்து பிரசாரத்தையும் விரைவில் தொடங்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, மூலவர், மத்தியபுரி அம்மன் மற்றும் காலபைரவர் சன்னதிகளில் வழிபட்டார். காலபைரவர் சன்னதியில் நேர்த்திக்கடனை செலுத்திய அவர், நீண்ட நேரம் தியானம் செய்தார். பின்னர் சிவாச் சாரியார்களுக்கு வேட்டிகளை வழங்கினார். கோவில் சார்பில் அவருக்கு சுவாமி–அம்மன் உருவப்படம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.