மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அங்குள்ள தும்குராவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
அப்போது பேசிய அவர் பா.ஜ.க..வை கடுமையாக விமர்சித்தார்.
‘’ பா.ஜ.க. அரசியல் கட்சியே அல்ல. அந்த கட்சி இந்த நாட்டின் சாபம். பொய்களின் மூட்டை’’ என முழங்கிய மம்தா,’’ தேர்தல் நேரத்தில் எங்கள் ( திரினாமூல் காங்கிரஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை லஞ்சம் கொடுத்து பா.ஜ.க.வினர் விலைக்கு வாங்குகின்றனர்’’ என குற்றம் சாட்டினார்.
‘’ இந்த கூட்டத்தில் அறைகூவல் விடுக்கிறேன். பா.ஜ.க.வுக்கு துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்யட்டும். ஜெயிலில் தள்ளட்டும்’’ என்று சவால் விடுத்த மம்தா..’’ சிறையில் இருந்த படியே திரினாமூல் காங்கிரஸ் கட்சியை தேர்தலில் வெற்றி பெறச்செய்வேன்’’ என தெரிவித்தார்.
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது,, ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜெயிலில் இருந்த நிலையிலும், தனது கட்சியை கணிசமான இடங்களில் வெற்றி பெற வைத்ததை மம்தா பானர்ஜி, இந்த பொதுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
-பா.பாரதி.