உள்ளூர் மதுபானத் தடையைத் தொடர்ந்து இன்று முதல் பீகார் மாநிலத்தில்  பூரண மதுவிலக்கு.
 
BIHAR LIQUOR  BANபீகார் மாநிலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் விற்பனை செய்ய முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
 
உள்நாட்டுத் தயாரிப்பு மதுவகைகளை விற்பனை செய்ய ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பீகாரில் தடை விதிக்கப்பட்ட்து. இதனைத் தொடந்து 4 நாட்கள் கடந்த நிலையில் தற்போது அனைத்து வகையான மதுவகைகளுக்கும் பிகார் மாநில அரசு தடை விதித்துள்ளது.
 
குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து  இந்தியாவின் நான்காவது மதுவிலக்கு பெற்ற மாநிலமாக பீகார் உருவெடுத்துள்ளது. இன்று முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக பீகார் முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.
Nitish-announces-liquor-ban-in
ஹோட்டல் மற்றும் மதுபான விடுதிகளில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி தரப்படாது. அதற்கான் உரிமங்களும் இன்றுமுதல் வழங்கப்படாது. அதேவேளை ராணுவ கேண்டீங்களில் மதுவகைகள் விற்பனை செய்யப்படும். மதுவிலக்கு அறிவிப்பு பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடம் மிகப்பெரும் மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினரின் உணர்வுகளுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில், மதுவிற்கான ஆயத்தீர்வை வரி வசூல் ரூ. 2 3,700 கோடியாக இருந்தது. அதேவேளை 2015-16 ஆம் ஆண்டில் இதன் இலக்கு  ரூ4,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மக்கள் மதுபான தடை விதிமீறல்களைப் பற்றி தெரிவிக்க 15545 மற்றும் 18003456288 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை கலால் மற்றும் மதுவிலக்கு துறை வெளியிட்டுள்ளது. மதுவிலக்கு விதிகளை மீறுவோர் மீது இந்த எண்ணுக்கு அழைத்து புகார் செய்யலாம்.
பீகார் மாநிலத்தில் 2016, ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கடந்தாண்டு நவம்பர் 26 ஆம் தேதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.