
234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என வேட்பாளர்களை அறிவித்துவிட்டது அ.தி.மு.கழகம். தி.மு.க. கழகமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையே தவிர, கூட்டணி அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகிவருவதாகவும், அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா ஆகிய கட்சிகளின் கூட்டணிதான் அது. இக் கட்சிகளுக்குள் நடக்கும் மறைமுக பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படுமானால் நாளை மறுநாள் கூட்டணி குறித்த அறிவிப்பு வரலாமாம்.
Patrikai.com official YouTube Channel