பெங்களூரு:
உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் சடங்குகளில் தலித்களும் பங்கேற்க விஷ்வேஸ்ஹதீர்ஹ சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். ராமஜென்ம பூமி இயக்கத்தை முன்னின்று நடத்தும் இந்த சுவாமியின் அழைப்பு பல நூற்றாண்டுகளாக இக்கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாகுபாடு முறை தகர்க்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் கோவிலில் பரவலாக காணப்படும் ஜாதி பாகுபாட்டை கலையும் இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அய்யர் மற்றும் தலித் உள்பட அனைத்து ஜாதியினரும் இங்கு சமமாக நடத்தப்படுவார்கள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.