
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவரை சந்திக்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இங்கோவன் டில்லி சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்காமல் ராகுல் காந்தி திருப்பி அனுப்பிவிட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
விரைவில் வர இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. கூட்டணியின் காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இது குறித்தும், காங்கிரஸின் தேர்தல் வியூகம் குறித்தும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடக்கூடியவர்களின் பட்டியல் குறித்தும் ராகுல் காந்தியுடன் கலந்தாலோசிக்க, இளங்கோவன் டில்லி சென்றிருக்கிறார்.
ஆனால், குலாம்நபிஆசாத், முக்குல்வாஸனிக் இருவர் மட்டும் ராகுலை சந்தித்தனர் என்றும், உடன் சென்ற இளங்கோவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து தனக்கு தவறான தகவல்களை தெரிவித்தாக இளங்கோவன் மீது ராகுல் வருத்தமாக இருக்கிறார் என்று டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel