மாவட்ட செய்திகள்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போலீசுக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

துவரங்குறிச்சி அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி. இங்கு முத்தாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் திருவிழா தொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களிடையே அடிக்கடி மோதல் வருவதுண்டு
இந்த வருடம் முத்தாளம்மன் கோவில் திருவிழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து கிராமத்தினரும் கலந்துகொண்டனடர். கூட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இது பற்றி ஒரு தரப்பினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் இருவரை போலீசார விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெவிவித்து கஞ்சநாயக்கன்பட்டி உள்பட எட்டு கிராம மக்கள் துவரங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். போலீசாரை கிராம மக்கள் தாக்கியதாக எட்டு கிராமங்களைச் சேர்ந்த, 178 பேர் மீது வழக்கு பதிந்து, 28 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு பயந்து பொதுமக்கள் வீட்டை பூட்டி கிராமங்களை காலி செய்து வெளியூர் சென்றுவிட்டனர். முதியவர்கள் சிலர் மட்டுமே கிராமங்களில் காணப்படுகின்றனர். கோவில் திருவிழாவுக்காக போடப்பட்ட பந்தல் மட்டுமே உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel