டில்லி:
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களுக்கு இடையே கடலுக்கு அடியில் நீச்சல் அடித்த வீரரின் வீடியோ பதிவுக்கு சமூக வளைதளத்தில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஹசீம் அல் கயிலி என்ற பேஸ்புக் பயன்பாட்டாளர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களுக்கு இடையில் கடலுக்கு அடியில் உள்ள பிளவு பகுதியில் ஒரு நீச்சல் வீரர் நீந்துவது போன்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
கண்டங்களின் தகடுகள் அமைந்துள்ள இந்த பகுதியில் நீச்சல் அடித்துள்ளார். உலகிலேயே தூய்மையான நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த காட்சி கனவில் காணும் காட்சி போல் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள பிளவு ஆண்டுக்கு ஒரு முறை 2 செ.மீ., விரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்க்கது. இந்த வீடியோ பதிவை 23 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 5 லட்சத்து 7 ஆயிரத்து 773 பேர் பகிர்ந்துள்ளனர்.