ஆப்ரிக்கா:-
இராணுவ வீர்ர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு பதிலாக தங்கள் நாட்டுப் பெண்களை கற்பழித்துக் கொள்ளும் உரிமையை தெற்கு சூடான் அரசு வழங்கியதாக ஐ.நா.மன்றம் குற்றம் சுமத்தி உள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு சூடானாகும். வடக்கு ஆப்பிரிக்காவில் எண்ணெய் வளமான நாடாகவும் சூடான் விளங்குகிறது. பல்வேறு உள்நாட்டுக் கலவரத்தையும் , விடுதலைப்போராட்டத்தையும் சந்தித்த அந்நாடு 2011 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.. அவ்வாறு புதிதாய் தோன்றிய தெற்கு சூடானில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உளநாட்டுக் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக அங்குள்ள பெண்களை கற்பழித்துக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததை ஐ.நா.ஆய்வுக்குழு ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1300 பெண்கள் இப்படி சூறையாடப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டினை ஆளும் அரசு மறுத்துள்ளது.
“ ராணுவ வீர்ர்கள் எதை வேண்டுமோ எடுத்துக் கொள்ளட்டும். எதைச் செய்யமுடியுமோ செய்து கொள்ளட்டும்..”என்ற ஒப்பந்த அடிப்படையில்தான் ராணுவ வீர்ர்கள் களமிறக்கப்பட்டனர். இதனடிப்படையில் அங்குள்ள பெண்களை கற்பழிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததாக ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.மேலும் அங்குள்ள மக்களின் வீடுகளிலிருந்த கால்நடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களையும் ராணுவத்தினர் திருடிச் சென்றுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“சொந்த நாட்டு மக்களை கற்பழித்துக் கொள்ளும் உரிமையை அநாட்டு அரசாங்கமே வழங்கியது கொடூரத்தின் உச்சம். இதுபோன்ற கொடுமை, உலகத்தின் எந்த மூலையிலும் நடைபெறவில்லை” என ஐ.நா மனித உரிமை ஆணையர் ஷியார் ராட் அல்-உசேன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
10 ராணுவ வீர்ர்கள் கூட்டாகச் சேர்ந்து 15 வயதுப் பெண்ணை கற்பழித்துப் பின்னர் அவருடைய கணவரையும் கொலை செய்து அட்டூழியம் செய்ததாக இக்கொடுமையை நேரில் பார்த்த ஒரு பெண்மணி தெரிவித்துள்ளார். இதேபோல் தன் குழந்தைகள் கண் எதிரே நிர்வாணப்படுத்தி 5 பேர் கொண்ட ராணுவக்கும்பல் கற்பழித்ததாக இன்னொரு பெண் கதறலுடன் தெரிவித்துள்ளார். மேலும் பல பெண்கள் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டு ராணுவ வீரர்களின் செக்ஸ் அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.நா.ஆணையத்திடம் பலரும் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ஸ்-சின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார், தெற்கு சூடானில் உள்ள 10 மாகாணங்களில் ஒரு மாகாணத்தில் மட்டும் 1,300 பெண்கள் ராணுவ வீரர்களின் கற்பழிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என ஐ.நா சபை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. பிற மாகாணங்களுடன் ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஐ.நா. அச்சம் தெரிவித்துள்ளது.