சென்னை

றைந்த மூத்த காங்கிரஸ் தலைவ்ர் ஈவிகேஎஸ் இளங்கோவ்ன் உடலுக்கு முதவ்வர் மு க ஸ்டாலின் இர்ண்டாம் நாளாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு (வயது 75) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். அவர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆறுதல்களைத் தெரிவித்தார்.

அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சென்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (15.12.2024) மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்திற்கு இன்று 2-ஆவது நாளாக நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதல்களை தெரிவித்தார். அவரூடன் அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், சு. முத்துசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.