1947 ம் வருடம் இதே நாளில்தான் அமெரிக்காவில் இருந்த பெல் டெலிபோன் கம்பெனியின் லேபரட்டரியின் ஆய்வாளர்கள் ஜான் பர்தீன்,வால்டர் கவுசர் பிரிட்டைன், வில்லியம் பிராட்போர்ட் ஷாக்லி ஆகியோர் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெற்றிகரமாக டிரான்ஸிஸ்டரை உருவாக்கினர்.
டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டதால் எலக்ட்ரானிக் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதற்காக 1956-ல் ஜான், வால்டர் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.