
ஐசக் நியூட்டன், கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன்..
நியூட்டன் , எளிமையான தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கினார். முதலில் நிறக் கோட்பாடு ஒன்றை உருவாக்கியவர் இவரே. ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.
அறிவியல் துறையில் இவர் உருவாக்கிய விதிகள் நியூட்டன் விதிகள் என்ற பெயரில் மிகப்புகழ் பெற்றவை
Patrikai.com official YouTube Channel