Blue_Linckia_Starfish

 

சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இந்த பூமியில் வாழ்கின்ற‌ன. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளில் இருந்து, திமிங்கிலம்,யானை போன்ற மிகப் பெரிய உயிரினங்கள் வரை உளளன. இந்த அத்தனை உயிர்களும், உயிர் சுழற்சிக்கு அவசியம். ஆனால், பல நூறு உயிரினங்கள் அழிந்துவிட்டன. மேலும் பல அழியும் விளிம்பில் இருக்கின்றன.

இந்த அத்தனை உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பெரிதாக ஒன்றுமில்லை.. “வாழு.. வாழ விடு” என்ற அடிப்படையில் மனிதன் வாழ்ந்தால் போதும்.. அனைத்து உயிர்களும் வாழும். இதை உணர்ந்து செயல்படுவோம்.

 

index

ராஜேஷ் கன்னா பிறந்தநாள்

பிரபல இந்தி நடிகரான ராஜேஷ் கன்னா 1942ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். நடிகராக மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரியல்வாதியாகவும் விளங்கினார்.

ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். 163 இந்தித் திரைப்படங்களில் நடித்தார்.

மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு 2005இல் வழங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து அளித்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுகிறார்.

3

 

நிர்பயா மறைவு

2012 டிசம்பர் 16 இல் தலைநகர் புது டில்லியில் நள்ளிரவில் ஒரு கும்பல் மருத்துவ மாணவியான நிர்பயா என்றழைக்கப்பட்ட ஜ்யோதி சிங்கை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயாவின் உடல் நலம் மோசமானது. பத்து நாட்களுக்குப் பின் மூளை செயல்பாடும் இழக்கவே, சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 2013 அன்று இதே டிசம்பர் 29 அன்று உயிரிழந்தார்.

நாடெங்கிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை கோரி ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆறு குற்றவாளிகளில் ஒருவர் விசாரணைக்காலத்தில் மரணமடைந்தார். நான்கு பேருக்கு தூக்கு தண்டனை. விதிக்கப்பட்டது. ஆறாவது நபர் 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளி என்பதால் சிறார் நீதி மன்றம் விதித்த மூன்றாண்டு தண்டனைக்காலம் முடிந்து சமீபத்தில் விடுதலையானார். இது நாடுமுழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறார் குற்றவாளிகள் என்பதன் வரையறை 18 வயதில் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டது. இதுவும் தற்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.