கம்யூனிச தத்து வத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் நெருங்கிய தோழராக விளங்கிய பிரடரிக் எங்கெல்ஸ் பிறந்தநாள் இன்று. நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்த இவர், பெரிய படிப்புகள் படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தனது தந்தையின் விருப்பத்தினால் 17 வயதிலேயே நெசவுத்தொழிலை கவனிக்க ஆரம்பித்தார்..ஆனாலும் சதன் சுய முயற்சியால் கல்வி பயின்று மேதையானார்.
மார்க்ஸ் இவரை ‘இன்னொரு நான்’ என அழைத்தார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு மார்க்ஸ் மறைந்த பிறகு, அவரது குறிப்பு நோட்டுகளில் இருந்து மற்ற மூன்று புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார்.
முழுமையான கம்யூனிச தத்துவம் உலகுக்குக் கிடைக்க காரணமாக இருந்தவர் எங்கெல்ஸ்தான்.