அண்ணா நினைவு தினம் (1969)
அண்ணா என்று அழைக்கப்பட்ட காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை, பேச்சாற்றல், எழுத்தாற்றல் என்று பன்முகம் கொண்டவராக விளங்கினார். திராவிட இயக்கத்தின் முக்கிய தூணாக விளங்கியவர். இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
1967 இல் நடைபெற்றத் தேர்தலில் அண்ணா தலைமையிலான திமு கழகம் வெற்றி பெற்றது. பதவி ஏற்றதும், சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கினார், இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) நீக்கினார். , மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடுஎன்று பெயர் மாற்றினார்.
ஜான் சிலம்புவே நினைவு நாள் (1915)
அருட்திரு. ஜான் சிலம்புவே மத போதகர். அதே நேரம், ஆப்பிரிக்க விடுதலைப்போராளியாகவும் விளங்கினார்.
பாப்திஸ்து சபை போதகரான இவர், ஆப்பிரிக்காவில் வெள்ளையின குடியேற்றத்தை எதிர்த்து நேரடி போராட்டத்தில் ஈடுபட்டய முதல் போராளி இவர். இவரது தலைமையில் ஜனவரி 15, 1915 இல் நயாசலாந்தில் வெள்ளையினக் குடியேற்றவாதிகளுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் முதன் முதலாக நடந்தது. அப்போது மூன்று வெள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள்.
வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக பலவித திட்டங்களுடன், போராட்டத்தை நடத்தினார். ஆனாலும் அவை வெற்றி பெறவில்லை. இவரும் இவரது அமைப்பினர் 40 பேரும் கொல்லப்பட்டார்கள். மேலும் 300 பேர் பிடிபட்டார்கள்.
யோன் சிலம்புவேவின் நினைவாக மலாவி நாட்டில் ஜான் சிலம்புவே நாள் என நினைவு கூரப்பட்டுகிறது.
சந்திரனில் முதல் விண்கலம் தரையிரங்கிய நாள் (1966)
சோவியத் யூனியனின் 1966 ஜனவரி 31ம் தேதி லூனா – 9 என்ற விண்கலத்தை சந்திரனுக்கு ஏவியது. இந்த விண்கலம் அதே வருடம் பிப்ரவரி 3ம் தேதி சந்திரனில் பத்திரமாக தரையிறங்கி வெற்றிகரமாக செயல்படத்துவங்கியது. சந்திரனின் மேற்பரப்பு குறித்து பல்வேறு தகவல்களையும் புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியது. நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் சோதனை முயற்சிகளில் அமெரிக்காவும் போட்டியிட்ட போதிலும் சோவியத் யூனியன்தான் இம்முயற்சியில் முதலில் வெற்றி பெற்றது. அதே 1966ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவும் தனது சர்வேயர் 3 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் மீது இறக்கியது.