தாராபாரதி பிறந்தநாள் ( 1947)
கவிஞர் தாராபாரதி, திருவண்ணாமலை மாவட்டம்‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கவிதையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். சிறந்த கவிதைகளை எழுதிய இவர் கவிஞாயிறுஎன்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 – 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது 2000ம் ஆண்டு மே 13ம் தேதி மறைந்தார்.
கே. எஸ். பாலச்சந்திரன் நினைவு நாள் (2014)
ஈழத்தைச் சேர்ந்த பல்துறை கலைஞரான கே.எஸ். பாலச்சந்திரன், பல்துறை கலைஞர் ஆவார்1965 முதல் ஈழ பகுதியில் மேடை நாடகங்களில் நடிக்கத்துவங்கினார். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
இலங்கையில் உருவான சில தமிழ்ப்படங்களில் நடித்தார். இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதினார்.
இவரது உச்சரிப்பை கேட்டுத்தான் நடிகர் கமலஹாசன் தெனாலி படத்தில் இலங்கைத் தமிழ் பேசி நடித்தார். இதை கமல்ஹாசனே கூறியிருக்கிறார்.
குவைத் விடுதலை நாள்
தென்மேற்கு ஆசியாவின் ஓர் அரபு நாடான குவைத், . பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ளது. இதன் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும்.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி, இந்நாடு, ஈராக் நாட்டால் கைப்பற்றப்பட்டது. இதன் பிறகு, அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. கூட்டணி படை, ஈராக் மீதூ பல நாட்கள் வான்வெளி தாக்குதலை நடத்திது. பிறகு 1991ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி தரை வழி தாக்குதலை நடத்த ஆரம்பித்தது. இதையடுத்து பிப்ரவரி 26ம் தேதி ஈராக் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டது. ஆகவே இந்த நாளை குவைத் விடுதலை நாளாக கொண்டாடுகிறார்கள்..