download (1)
யுடியூப் துவக்கம் (2005)
யுடியூப் என்பது கூகிள் நிறுவனத்தின் இணையவழி சலனப்படங்களை வழங்கும் இணையதளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால்  சலனபடங்களை பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் சலனபடங்கள்  உள்ளன.
பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.
பிப்ரவரி 2005 -ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி , ஸ்டீவ் சென் ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் துவங்கினர். .சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் படித்தவர் . ஸ்டீவ் கரீம் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இல்லினோயஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.
‘மி அட் ஸூ’ என்ற காணொளியே இதில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஆகும்
 
download (2)
 
கலிலியோ பிறந்தநாள் (1564)
கலிலியோ, இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் அறிஞர், மற்றும் தத்துவ ஞானி
என பன்முகம் கொண்டவர். வானவியல் தொலைநோக்கியை மேம்படுத்தி, பலவித வானவியல் ஆராய்ச்சிகளை செய்தவர். ஆகவே, “நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை, “நவீன இயற்பியலின் தந்தை”, “அறிவியலின் தந்தை”, மற்றும் “நவீன அறிவியலின் தந்தை என்றெல்லாம் புகழப்படுகிறார்.
தொலைநோக்கி மூலம் வெள்ளி கிரகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை உறுதி செய்தார்.  வியாழன் கிரகத்தில் நான்கு பெரிய நிலாக்களை இருப்பதை கண்டுபிடித்தார். சூரியனில்  காணப்படும் கரும்புள்ளியை ஆராய்ந்தார்.
மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி மற்றும் பிற கருவிகளையும் கண்டுபிடித்துள்ளார்.
இவரது சில கண்டுபிடிப்புகளை ஏற்காமல் வீட்டுச்சிறையில் அடைத்தார்கள். அப்போதுதான்   அவரது மிகச்சிறந்த படைப்பு ஒன்றை எழுதினார். தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய இயங்கியல் மற்றும் பொருட்களின் வலிமை பற்றிய வேலைப்பாடுகளை “டூ நியூ சையின்சஸ்” என்ற  நூலாக எழுதினர். 1642ம்  ஆண்டு மறைந்தார்.
 
download
கொத்தமங்கலம் சுப்பு நினைவு நாள் (1974)
பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர், பத்திரிக்கையாளர், என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார் கொத்தமங்கலம் சுப்பு. மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள்  தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். இது திரைப்படமாகவும் வெளியாகி பெரும் வெற்றி பெறறது.
பத்மஸ்ரீ  விருது இவருக்கு அளிக்கப்பட்டது.