susma
சுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1952)
வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ள  மத்திய அமைச்சரான சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் 15வது நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த இவர், அதற்கு முன் தில்லியின் முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட போது,  மக்களவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜ்நாத் சிங்கும் அவருடன் சென்றிருந்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 23 ஆம் திகதி 3 மணிவரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்தார்.
 
வாலன்டைன்
புனித வேலண்டைன்  நினைவு நாள்
இவர் ரோம் நகரின் புனிதராக கொண்டாடப்படுகிறார். அந் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஃபிலாமினியாவில் பிப்ரவரி 14 அன்று கொல்லப்பட்டார். காதலர்களுக்கு உதவியாதால் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. மற்றபடி இவரைப்பற்றிய வேறெந்த உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை.
புனித வேலண்டைன் என்று ஒரு புனிதரா அல்லது அதே பெயரில் இரு புனிதர்கள் உள்ளனரா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனாலும் உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று இவர் நினைவுகூறப்படுகிறார்.
 
ஜேம்ஸ் குக்
ஜேம்ஸ் குக் நினைவு தினம் (1728)
இங்கிலாந்தைச் சேர்ந்த கடற்பயண ஆய்வாளரும் மாலுமியுமான ஜேம்ஸ்கும்,  பிரிட்டிஷ் அரச கடற்படை அணித்தலைவராக பதவி வகித்தார். பசுபிக் சமுத்திரத்தில் தனது கப்பல் எச்.எம்.பார்க் என்டேவரில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். பசுபிக் பெருங்கடலில் பல இடங்களையும்,தீவுகளையும் கண்டறிந்தவர். ஆஸ்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளைமுதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர்  இவரே..
1770ம் ஆண்டு  ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டு . அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார். அவர் தன் வாழ்நாளில் இரு முறை உலகத்தை வலம் வந்துள்ளார். அன்டார்டிகா பகுதிகளிலும் தனது பயணத்தை மேற்கொண்டவர் இவர். வட அமெரிக்காவிலும் பல தீவுகளை இவர் கண்டுபிடித்துள்ளார். தனது கடல் பயணங்களின்போது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தான் பார்த்த இடங்களின் வரைபடங்களையும் உருவாக்கினார்.  தான்  கண்டுபிடித்த இடங்களைப் பற்றியும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.
 
கோவை குண்டு வெடிப்பு
கோவை குண்டு வெடிப்பு (1998)
பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, கோவையில் தேர்தல் பிரசாரத்தில் பேசுவதாக இருந்த ஆர் .எஸ். புரம் மற்றும் பல இடங்களில், 1998ம் ஆண்டு இதே நாள் மாலை 4.30 மணி முதல் 17 இடங்களில் பல்வேறு வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அதற்கு முந்தைய ஆண்டு கோவை நகரில் அப்பாவி முஸ்லீம் மக்கள் இந்து முன்னணியினரால் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு இக்குண்டு வெடிப்புகளை அல்- உம்மா தீவிரவாதிகள் நடத்தியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அல் உம்மா இயக்க தலைவர் பாட்சா, அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறப்பு நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கடந்த 2007 ல் தீர்ப்பளிக்கப்பட்டது.
 
2963_1020994557958847_6627423804864947565_n
முதல் தலைமுறை கணினி அறிமுகம் (1946)
ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமான நாள் இன்று.  எனியாக்  (ENIAC) என்பதன்  விரிவாக்கம்,- Electronic Numerical Indicator Analyzer Computer) என்பதாகும்.  இதுவே உலகின் முதலாவது முழு மையான மின்னணு கணினியாக கருதப்பட்டது. இது 30 டன் எடையும் 100 அடி நீளமும் 8 அடி உயரமுமாகக் காணப்பட்டது.  இந்த கணினியில்தான் முதன்முறையாக மையச் செயலகமும் (Central Processing Unit – CPU), நினைவகமும் (Memory) பயன்படுத்தப்பட்டன. நிரலையும், தரவுகளையும் (Data) நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இந்த கணினி மிகபெரியதாக இருந்தது.  ஒரு பெரும் அறை முழுவதையும் இது ஆக்கிரமித்திருந்தது.