ஆப்பிரிக்க காங்கிரஸ் துவக்கப்பட்டது
, 1912 ம் ஆண்டு இதே நாளில்தான் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க இன மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடவும் அவர்களது உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடனும் ஐந்து தென் ஆப்பிரிக்க தலைவர்களால் இக் கட்சி துவங்கப்பட்டது. 1944ல் நெல்சன் மண்டேலா இக்கட்சியில் சேர்ந்து பின்னர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றபின்னரே தென்னாப்பிரிக்காவின் விடுதலையை குறிக்கோளாகக் கொண்ட ஒரு பெரும் மக்கள்சக்தி எழுச்சி இயக்கமாக இந்த கட்சி உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
மொனாக்கோ சுதந்திர தினம்
வாட்டிகன் நாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறிய நாடான மொனாக்கோ சுதந்திரமடைந்த நாள் இன்று. ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டை ஒட்டி இருக்கும் இந்த நாட்டின் பரப்பளவு 1.98 சதுர கிலோ மீட்டர்தான். மக்கள்தொகை 35,986 பேர்.
உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட இந்த நாடு உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும்கூட. தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுதான். சமீபத்தில் ஹேர்க்குலி துறைமுக விரிவாக்கத்தை அடுத்து இநநாட்டின் பரப்பளவு 2.05 சதுர கிமீ ஆக அதிகரித்தது. மேலும், கடலை தூர்த்து தனது பரப்பளவை விரிவாக்கும் பணியை தொடர்ந்து இந்தநாடு செய்து வருகிறது.
பண்டார நாயகா பிறந்தநாள் ( 1899)
இலங்கயின் நான்காவது பிரமரான பண்டார நாயகா பிறந்தநாள் இன்று. சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா என்ற முழு நீள பெயர் கொண்ட இவர் கிறித்துவராக இருந்தாலும், தனது அரசியல் நலனுக்காக சிங்கள பவுத்தராக வெளிப்படுத்திக்கொண்டார்.
. ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து பல்வேறு பதவிகளை வகித்த இவர், 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.
1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாயிருந்த ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்கள மொழியை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாக்கினார். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரவமாக அமல்படித்தியவர் இவர்தான்.
தன்னை சிங்கள வெறியராக வெளிப்படுத்திக்கொண்ட இவர், சிங்கள வெறிகொண்ட பவுத்த பிக்கு, சுட்டுக்கொன்றார்.
லசந்த விக்கிரமதுங்க நினைவு நாள்
மனித உரிமைகளுக்காக போராடிய இலங்கை பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க 2009ம் ஆண்டு இதே நாள்தான் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து எதிர்த்து எழுதி வந்தார். பலமுறை இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தாக்குதல்களும் நடந்தன. ஆனாலும் உயிருக்கு அஞ்சாமல் எழுதிவந்தார்.
இவர் எழுதிய தலையங்க கட்டுரை, இவரது திடீர் மறைவால் பிறகு வெளியானது. அதில் இவர், “என் மரணத்தின் பாதையை நான் அறிவேன். நீ போலியான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, போலீஸை அழைத்து வேகமாக விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணைகளைப் போலவே, இப்போதும் நடக்கும். ஆனால், ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!
என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும். தேசப்பற்று என்ற பெயரால் பலர் தங்களது உயிரைத் துறக்கும் உண்மையை ஜனாதிபதி தெரிந்துகொள்ள இது உதவும். மனிதநேயம் வளம் பெறும். எத்தனை ராஜபக்சேக்கள் இணைந்தாலும் அதை அழிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே போல இவரது கொலை விராசணை முறையாக நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.