ராஜா ராமண்ணா பிறந்தநாள்(1925)
இந்திய அணு ஆற்றல் துறையின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ராஜா ராமண்ணா, இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அளப்பறிய பங்களித்தவர். அறிவியலாளர் என்பதோடு, இசைக்கலைஞர்; சமற்கிருத இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதை என பன்முகம் கொண்டவராக விளங்கினார் ராமண்ணா. .1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவணத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட ‘சிரிக்கும் புத்தர்’ என்ற புனைப்பெயரில் இந்தியாவின் முதல் அணு குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர். கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் பிறந்த இவர், சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் படித்தார்.
சென்னையில் முதல் தொலைபேசி (1882)
இங்கிலாந்தை சேர்ந்த தி ஓரியண்டல் டெலிபோன் கம்பனி சென்னை எர்ரபாலு செட்டி தெருவில் 1881ம் ஒரு தொலைபேசி நிலையத்தை துவக்கியது. அப்போது அதன் வாடிக்கையாளர்கள் 93 பேர் மட்டும்தான். இவர்கள் அனைவரும் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருந்த ஆங்கிலேயர்கள்தான்.
முதல் இணைப்பு 1882ம் ஆண்டு இதே நாளில்தான் அளிக்கப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த சென்னை மாகாண கவர்னருக்கும் பிராட்வே யிலிருந்த பீஹேவ் பவுண்டரி என்ற ஏற்றுமதி கம்பெனியின் முதலாளிக்கும் அந்த இணைப்பு கொடுக்கப்பட்டது.
லாலா லஜ்பத் ராய் பிறந்தநாள் (1865)
பஞசாப் சிங்கம் என்று போற்றப்படும் லாலா ரஜபதிராஜ், இந்தியாவின் விடுதலைக்காகவும் சமூக, சமயப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்.
பஞ்சாபில் பிறந்த இவர், லாகூர் அரசுக் கல்லூரியில் சட்டம் பயின்ற பிறகு, வழக்கறிஞராகப் பணி யாற்றினார். அலகாபாத் தில் 1888-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். வங்கப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியது.
சுரேந்திரநாத் பானர்ஜி, அரவிந்தகோஷ் ஆகியோருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்
பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது இதையடுத்து ஆறு 6 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டார்.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இதனால் 18 மாத சிறைத் தண்டனை பெற்றார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி கைவிட்டதால், சுயராஜ்ஜியக் கட்சியில் இணைந்தார். .
ஒரே மொழிதான் நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்கும் என்று கருதிய அவர், இந்தியை தேசிய மொழியாக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.
அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்துக்கான சைமன் குழுவில் ஒரு இந்தியர்கூட இடம்பெறாதது நாடு முழுவதும் ஆவேச அலையை எழுப்பியது. 1928-ல் லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜ்பத் ராய், ‘‘என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்’’ என்று முழங்கினார்.
காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லஜபதிராஜ், சில நாட்களிலேயே காலமானார்