பித்துகுளி முருகதாஸ் பிறந்தநாள் (1920)
“அலை பாயுதே கண்ணா… ஆடாது அசங்காது வா கண்ணா” போன்ற புகழ்பெற்ற பல பக்தி பாடல்களைப் பாடிய பித்தகுளி முருகதாஸின் இயற்பெயர், பாலசுப்பிரமணியம். கோவையில் சுந்தரம், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவர், இசை பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவரது. தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் புகழ் பெற்ற பாடகர்.
1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இரமண மகரிஷியை சந்தித்த பின்னர், ஆன்மிகம் பக்கம் திரும்பினார். தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் முருகதாஸ், செய்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர். சங்கீத சாம்ராட் , கலைமாமணி என்று பல விருதுகளை பெற்றவர்.
கொரசோன் அக்கினோ பிறந்தநாள் (1933)
பிலிப்பைன்சின் அரசியல்வாதியும், மக்களாட்சி, அமைதி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு குரல் கொடுத்தவருமான கொரசோன் அக்கினோ வின் முழு பெயர்,
மரீயா கொரசோன் “கோரி” அக்கினோ ஆகும்.
இவர் பிலிப்பைன்சின் 11வது குடியரசுத் தலைவராக 1986 முதல் 1992 வரை பதவி வகித்தார். பிலிப்பைன்சின் முதலாவது பெண் தலைவரும் இவரே.
செல்வச்செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். பிலிப்பைன்சில் மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த பெனினோ அக்கினோ என்பவரை திருமணம் புரிந்தார். பெனினோ, அப்போதைய பிலிப்பைன்ஸ் குடியரசு தலைவராக பதவி வகித்த பெர்டினண்ட் மார்ச்கோசின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து வந்தவர். இதையடுத்து பெனினோ நினோய் அகினோ நாடு கடத்தப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 இல் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கொரசோன், தனது கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவரானார்.
பெரும் மக்கள் போராட்டத்துக்குப் பிறகு சர்வாதிகாரி மார்கோசை வீழ்த்தி, இவர் பதவிக்கு வந்தார்.
தேசிய வாக்காளர் நாள்
இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.
ராஜஸ்தான் உதயம் (1971)
இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 1950-ஆம் ஆண்டு முதல் இமாசல பிரதேசம், யூனியன் பிரதேசமாக இருந்து வந்தது. அதற்கு முன்னர் இது பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாக இருந்தது. இமயமலை பகுதியில் அமைந்துள்ளதால் மலை மற்றும் மலை சார்ந்த மாநிலமாக இப்பகுதி இருக்கிறது. இந்தியாவில் அதிகளவு தனிநபர் வருவாய் உள்ள மாநிலங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. நீர் மின்சக்தி உற்பத்தி, சுற்றுலா, விவசாயம் ஆகியவை மாநிலத்தின் முக்கிய வருவாய் இனங்களாக இருக்கின்றன. எழில் கொஞ்சும் இயற்கை அழகு மிகுந்த இம்மாநிலத்தின் தலைநகரம் சிம்லா ஆகும்.