
ராகேஷ் ஷர்மா பிறந்ததினம்
விண்வெளியில் பறந்த முதல் இந்திய வீரரான ராகேஷ் சர்மா, பிறந்ததினம் இன்று. இவர். விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார்.
பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார். 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தார்கள். அவர்களில் ராகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.
ராகேஷ் சர்மாவின் பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் நாயகன் என்னும் விருதையும் பெற்றார்

அஞ்சலிதேவி நினைவுதினம்
பிரபல நடிகையாக விளங்கிய அசலிதேவி மறைந்த தினம் இன்று. (2014) தெலுங்கு, மற்றும்தமிழ் திரைப்படங்களில் நடித்ததோடு, திரைப்படங்களும் தயாரித்தார். லவகுசா திரைப்படத்தில் சீதையா
1936 இல் வெளியான ராஜாஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெயரைச் சூட்டினார். அந்த படத்தின் மூலம் இவர் பெரும் புகழ் பெற்றார். ஏறத்தாழ 350 தெலுங்குத் திரைப்படங்களிலும், சில தமிழ், கன்னடப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
(இருவர் படங்கள் மற்றும் 13 என்ற முகப்புபடத்துடன் பதிவிடவும்.)
Patrikai.com official YouTube Channel