புருனே விடுதலை
புரூனே போர்ணியோத் தீவில் அமைந்துள்ள ஒரு நாடு. இது வடக்கில் தென் சீனக் கடலாலும் ஏனைய பக்கங்களில் மலேசியாவின் சறவாக் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்நாடு 1984 சனவரி 1 இல் பிரிட்டனிடம் இருந்து முழுச் சுதந்திரம் பெற்றது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று புருனே. இந்நாட்டின் மன்னர், உலக பணக்காரர் வரிசையில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். உலகிலேயே மிக அதிகமான கார்களை வைத்திருப்பவர் இந்நாட்டு மன்னரே.
யூரோ வெளியீடு
யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணயம். இந்த நாணயம் ஒரு நாளில் சராசரியாக 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது.[ மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். “யூரோ” என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 1999ம் ஆண்டு யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நித்தி பிறந்த தினம்
சிரிப்புக்கும் சர்ச்சைக்கும் பெயர் பெற்ற ஆன்மிகவாதி நித்தியானந்தா 1978ம் ஆண்டு இதே நாளில் பிறந்ததாக சொல்கிறார். (இதிலும் சர்ச்ச உண்டு!)
இவர் அமைத்துள்ள தியானபீடம் (ஆசிரமம்) 800 கிளைகளுடன் 21 நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ரஞ்சிதாவுடன் சுவாமி நித்தியானந்தா பாலியல் உறவு கொண்டிருந்த காணொளியை 2010, மார்ச் 2 இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதையடுத்து ஆசிரமத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் பதுங்கியிருந்த சுவாமி நித்தியானந்தரை கர்நாடக காவல்துறை ஏப்ரல் 21, 2010 அன்று கைது செய்தது. அப்போது அவரிடம் மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாயிரம் டாலர் பயண காசோலையும் இருந்தது. விஜயகாந்தைவிட ஆக்ரோஷமானவர். ஒரு முறை தனது பிடாதி ஆசிரமத்தில் வைத்து, பத்திரிகையாளர்கலை அடித்தே இருக்கிறார்! ஏகப்பட்ட சர்ச்சைகள் வலம் வந்தாலும் புன்னகை மாறாமல் உலா வருபவர்.
சோனாலி பிறந்தநாள்
மாடலும், நடிகையுமான சோனாலி பேந்த்ரே 1975ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றாலும் சில மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
1994ம் ஆண்டு, ஆக் திரைப்படத்தில் கோவிந்தாவிற்கு ஜோடியாக பிந்த்ரே முதல்முறையாகப் பாத்திரம் ஏற்று நடித்தார். காதலர் தினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
வித்யாபாலன் பிறந்தநாள்
1978ம் ஆண்டு இதே நாளில்தான் நடிகை வித்யா பாலன் பிறந்தார். சமூகவியல் இளங்கலை படித்த இவர், மாடலாக புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஆனார். ஆனால் இவரது முதல் திரைப்படம் வங்காள மொழிபடம்.
இந்தி திரைப்படமான பரிநீத்தா (2005) என்பதில் அறிமுகமாகி, பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார் தேசியத் திரைப்பட விருதுகளில் டர்ட்டி பிக்சர் என்ற இந்தித் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.[2]