சென்னை

ன்று சுனாமி கோரத்தாண்டவத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.

தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்து கொட்டில்பாடு பகுதியில் உயிரிழந்த 199 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன  இந்த சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம்.

இன்று சுனாமி எனும் இயற்கைப் பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே கடற்கரையோர மக்கள் அமைதிப் பேரணியாக சென்று கடலில் பால் ஊற்றி, பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனா்.