இதை ஆங்கிலத்தில் “இன்டர் நேஷனல் ஜர்னலிஸ்ட் ரிமம்பரன்ஸ் டே (International Journalist’s Remembrance Day) என்று அழைக்கிறார்கள்.
மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்பதற்காக, அநீதிகளை தட்டிக்கேட்க வேண்டும் என்பதற்காக தங்களது உயிரை பணயம் வைத்து செய்தி சேகரிக்கும் உழைக்கும் பத்திரிகையாளர்களை நினைவு கூறும் நாள்.
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் குண்டு வெடிப்பிலோ அல்லது கடத்தப்பட்டோ கொல்லப்படுகிறார். அதைவி பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடாக இருக்கிறது இலங்கை. அரசின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் அம்பலப்படுத்தம் பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவது, கடந்த ராஜபக்சே ஆட்சியில் தொடர்ந்து நடந்தது. இப்போதும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், மிரட்டல்கள தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.