சென்னை

ன்று (மார்ச் 30) உலக இட்லி தினம் ஆக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு என்றாலே அனைவரும் நினைவு கூர்வது இட்லி தான். அதுவும் இட்லி சாம்பார் என்னும் உணவு தமிழக மக்களின் பாரம்பரிய உணவாகும். இட்லி என்பது ஆவியில் வேகும் தின்பண்டம் என்பதால் உடல் நலம் குன்றியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் உகந்த உணவு என அனைவரும் அறிவார்கள். ஆனால் இன்றைய தினம் சர்வ தேச இட்லி தினம் என்பது எத்தனை தமிழருக்கு தெரியும் என்பது சந்தேகம் தான்.

கடந்த நான்கு வருடங்களாக உலக இட்லி தினம் கொண்டாடுவது என்னும் கருத்தை மல்லிப்பூ இட்லி என்னும் உணவக தொடரின் உரிமையாளர் எம் இனியவன் கொண்டு வந்துள்ளார். அதிக அளவில் இட்லி விற்கும் உணவகங்களில் பணி புரிவோருக்கு கூட இது பற்றி தெரிவதில்லை. அந்த இட்லி பலருக்கு அடிப்படை உணவாக உள்ள குறிப்பாக பணி புரியும் மகளிர், இல்லத்தரசிகள் ஆகியோருக்கு இது பொருந்தும்.

இது குறித்து ஸ்டீல் பொருட்கள் விற்பனை செய்யும் அம்ரிதா, “என் வாழ்நாளில் இன்று தான் முதன் முதலாக இது குறித்து கேள்விப்படுகிறேன். இனி ஒவ்வொரு மார்ச் 30 ஆம் தேதியும் இட்லி செய்வதை வழக்கமாக கொள்வேன்” என கூறி உள்ளார். இட்லி தினம் குறித்து நேற்று தான் அறிந்த டிரைடண்ட் ஓட்டல் பொது மேலாளர் பிரகாஷ் ஜெயதேவன் இன்று பல வகையிலான இட்லிகளை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு இட்லி விற்பனையாளரான இட்லி ஃபேக்டரி என்னும் உணவக உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் என்பவர் இன்று ஸ்விக்கி, ஸொமொட்டோ, மற்றும் உபேர் மூலமாக இட்லி வாங்குவோருக்கு மூன்று நாட்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது தற்போதைய விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வசூலிக்க உள்ளதாக தெரிவித்த்டுள்ளார்.

இந்த இட்லி ஃபேக்டரி பல பெரிய மற்றும் சிறிய உணவகங்களில் இருந்து ஸ்டார் ஓட்டல்கள் வரையும் ஆன்லைனில் பொதுமக்களுக்கும் இட்லி விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த விலை குறைவுக்கும் ஒரு சில உணவகங்கள் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளன.

நகரின் மிகப் புகழ் பெற்ற இட்லி சாம்பார் உணவகமான ரத்னா கபே யில் இந்த விலை குறைப்பு கிடையாது என அறிவித்துள்ளது. சாம்பாரில் முழுகி வரும் ரத்னா கபே சாம்பார் இட்லி நகர மகக்ளின் மனதை கவர்ந்த உணவாகும். அதை போலவே முருகன் இட்லி கடை உணவகங்களிலும் இட்லி சலுகை விலையில் விற்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலக இட்லி தினம் குறித்த விவரம் அறிந்தஒரு சில நெட்டிசன்கள் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி அதிகம் விற்பனையாவது பெங்களூரு நகரில் ஆகும்.   அதற்கு அடுத்தபடியாக மும்பையும் மூன்றாவது இடத்தில் சென்னையும் உள்ளது.   அதற்கு அடுத்த இடங்களில் புனே மற்றும் ஐதராபாத் நகரங்கள் உள்ளன.