அதிமுக, திமுக உட்பட பல கட்சிகளில், கட்சி அறிவித்த வேட்பாளரை மாற்றச்சொல்லி, சக கட்சிக்காரர்களே போராட்டம், ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பு என்று அதிரடிகளை நடத்துகிறார்கள். வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல் பணி செய்ய மாட்டேன் என்று ஒத்துழையாமை அறிவிப்பையும் வெளியிடுகிறார்கள். அவ்வளவு உட்கட்சி பூசல்.
ஆனால் சி.பி.எம். கட்சியில் நடப்பதே வேறு.
விளவங்கோடு தொகுதியில் 2011 -ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர் லீமாரோஸ். வரும் தேர்தலில் அதே தொகுதியில் ஆர்.செல்லசுவாமியை வேட்பாளராக கட்சி அறிவித்திருக்கிறது.
உடனே அவருக்காக லீமாரோஸ் களத்தில் இறங்கி, சுவர் எழுத்துப் பணியை மேற்கொண்டார். இந்த படம் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“எங்கள் கட்சிக்கார்ரகளின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வு அத்தனை மகத்துவமானது” என்று அக் கட்சியினர் பெருமைப்படுகிறார்கள்.