1

 

மீபத்திய வெள்ளத்தின் போது, தன்னார்கள் அளித்த வெள்ள நிவாரண பொருட்களில் கட்டாயமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் படத்தை ஒட்ட வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்தன.

இந்த போக்குக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. சமூகவலைதளங்களிலும் பலர் இதை எதிர்த்தும், கிண்டல் செய்தும் பதிவிட்டனர். அவர்களில் ஒருவரான காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல் உரிமையாளர் சரவணன் என்பவர், ஆண்களின் உள்ளாடையில் ஜெயலலிதா படம் ஒட்டியிருப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவு செய்தார்.

இதையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், அரசே அளித்த உள்ளாடைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பேஸ்புக்கில் பதிந்திருக்கும் அன்பழகன் வீரப்பன், https://www.facebook.com/anbalaganfb?fref=ts  ““இதற்காக மாநில அரசு, யாரைக் கைது செய்யும்” என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.

தமிழக அரசும், காவல்துறையும்தான் இந்த கேள்விக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.